இந்தியா

மத்திய பட்ஜெட்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து

Published On 2024-07-23 10:32 IST   |   Update On 2024-07-23 14:06:00 IST
  • ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
  • நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி:

நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். அதன்படி 2024, 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.

 

இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News