லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவர்
இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரனாம்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
லடாக்கில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.20,700 கோடி நிதி ஒதுக்கீடு
பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டிற்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு
42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன் விஷ்வாஷ் என்ற மசோதா கொண்டு வரப்படும்- நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு
பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்- நிர்மலா சீதாராமன்
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும்