இந்தியா
null

லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-02-01 04:43 GMT   |   Update On 2023-02-02 00:47 GMT
  • 5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
  • இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். 

பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிதி மந்திரி கூறி உள்ளார்.

2023-02-01 06:54 GMT

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை

2023-02-01 06:54 GMT

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு

2023-02-01 06:53 GMT

நடப்பாண்டு 6.5 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2023-02-01 06:46 GMT

ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிப்பு- பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2023-02-01 06:45 GMT

தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு

2023-02-01 06:44 GMT

மொபைல் போன், மேகரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீமாக குறைப்பு

2023-02-01 06:43 GMT

மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி குறைப்பு

2023-02-01 06:41 GMT

சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைப்பு

2023-02-01 06:41 GMT

நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு வரப்படும்

2023-02-01 06:40 GMT

2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

Similar News