இந்தியா

கோப்புப் படம்

முதுகு வலிக்காக மேலதிகாரியிடம் Sick leave கேட்ட ஊழியர் 10 நிமிடத்திற்குள் மாரடைப்பால் உயிரிழந்த விபரீதம்

Published On 2025-09-16 04:15 IST   |   Update On 2025-09-16 04:16:00 IST
  • பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
  • புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை நம்ப முடியவில்லை.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதுகு வலி காரணமாக மேலதிகாரியிடம் Sick leave கேட்ட ஊழியர் சரியாக பத்து நிமிடங்களுக்குள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த சங்கர் (40) கடந்த 13 ஆம் தேதி தனது மேலதிகாரி கே.வி. ஐயருக்கு காலை 8:37 மணிக்கு, தனது முதுகு வலி காரணமாக அன்றைய தினம் விடுப்பு வேண்டும் என மெசேஜ் அனுப்பினார். மேலதிகாரி கே.வி.ஐயரும் விடுப்பு வழங்கி ஓய்வு எடுக்குமாறு பதிலளித்தார்.

ஆனால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.

இந்த துயரச் செய்தியை ஐயர் காலை 11 மணிக்கு அறிந்தார். காலையில் தன்னிடம் விடுப்பு கேட்ட நபர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தை ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அவரது பதிவில், "புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது" என்று அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  

Tags:    

Similar News