இந்தியா

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் - காலை 11 மணி நிலவரம்

Published On 2023-02-27 06:32 GMT   |   Update On 2023-02-27 06:32 GMT
  • நாகாலாந்தில் 11 மணி நிலவரப்படி 35.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
  • மேகாலயாவில் 11 மணி நிலவரப்படி 26.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 11 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 35.76 சதவீதமும் மேகாலயாவில் 26.07 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News