இந்தியா

மும்பை: 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 3 பேர் பலி

Published On 2025-08-27 08:09 IST   |   Update On 2025-08-27 08:09:00 IST
  • படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

வசாய் தாலுகாவில் உள்ள நாரங்கி சாலையில் சாமுண்டா நகருக்கும் விஜய் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 25 நபர்கள் வரை வசித்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News