இந்தியா

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள்: அமித் ஷா

Published On 2025-06-19 15:08 IST   |   Update On 2025-06-19 15:14:00 IST
  • நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது.
  • நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து, மாநில மொழிகளை அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், நம்நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள். அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய மொழிகளில் இல்லையென்றால், நாம் உண்மையான இந்தியனாக இல்லாமல் போய்விடுவோம்.

நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது.

Tags:    

Similar News