இந்தியா
கலகலப்பு பட பாணியில் 'Exhaust Fan' துளையில் சிக்கிய திருடன் - வைரல் வீடியோ
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்ற நபர் தனது மனைவியுடன் கோவிலிக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் 'Exhaust' வழியாக ஒருவர் சிக்கி கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பயத்தில் கத்திய ராவத் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர். தன்னுடைய கூட்டாளிகள் தன்னை தவிக்க விட்டு தப்பியோடியதாக கைதான திருடன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு பட காட்சியை இபபடம் நியாபக படுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர்.