இந்தியா
null
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி
- சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது.
- நுரையீரல் டாக்டரின் கண்காணிப்பில் சோனியா காந்தி உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறார்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது. நாள்பட்ட இருமல் பிரச்சினை உள்ளதால் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். நுரையீரல் டாக்டரின் கண்காணிப்பில் உள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.