இந்தியா

'ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா' விளம்பரத்துக்கு 55 நாட்களில் ரூ.4.76 கோடி செலவிட்ட மத்திய அரசு - RTI தகவல்

Published On 2026-01-06 04:15 IST   |   Update On 2026-01-06 04:15:00 IST
  • நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி.
  • மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

8 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் பல 5% அடுக்கில் கொண்டுவரப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை 'ஜிஎஸ்டி பச்சத் உற்சவ்' - 'ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா' என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நாடு விளம்பரப்படுத்தியது.

இந்நிலையில் இந்த விளம்பரங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் அக்டோபர் 28, 2025 வரையிலான வெறும் 55 நாட்களில் 4.76 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தகவல் பணியகம் அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.

நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி. அச்சு ஊடக செலவு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.  

Tags:    

Similar News