இந்தியா

ஆடு, புறாக்களை திருடியதாக வாலிபரை தலைகீழ் தொங்கவிட்டு தாக்கியதோடு, சிறுநீர் கழித்த கொடூரம்

Published On 2023-08-28 08:30 IST   |   Update On 2023-08-28 08:52:00 IST
  • வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், மூன்று சிறுவர்கள் மீதும் தாக்குதல்
  • வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை கழற்றி தாக்குதல்

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நான்கு பேரை சிலர் மரத்தில தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியதோடு, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, ஷூவை நாக்கால் நக்க வலியுWத்திய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பான வீடியோ வெளியாகியதால், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். ஆடு மற்றும் புறாக்களை திருடியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது:-

நாங்கள் மஹார் என்ற குறைந்த சாதியை சேர்ந்தவர்கள். அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள். எங்கள் மீது சிறுநீர் கழித்தார்கள். அவர்களுடைய ஷூவில் எச்சில் துப்பி, அதை நக்குமாறு தெரிவித்தார்கள்

என்னுடைய கால்களை கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டார்கள். என்னுடன் மூன்று சிறுவர்கள் இருந்தனர். அவர்கள் மீதும் தாக்கினர். நாங்கள் அவர்களுடைய அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்கள்தான்" என்றார்.

மேலும், "தன்னை தாக்கிய நான்கு பேரின் பெயர்களை குறிப்பிட்ட அவர், ஒருவரின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி தாக்கினார்கள்" என்றார்.

இந்த வீடியோ காட்டுத்தீயாக பரவ, போலீசார் கொலை முயற்சி, கடத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. "பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக பரப்பும் வெறுப்பின் விளைவுதான் இதுபோன்ற சம்பவங்கள். இது மனித குலத்தின் மீதான கறை'' என அம்மாநில காங்கிரஸ தலைவர் நானா பட்டோல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News