இந்தியா

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நான் செய்யப்போகும் விஷயங்கள் இவைதான் - அமித் ஷா ஓபன் டாக்

Published On 2025-07-10 04:15 IST   |   Update On 2025-07-10 04:16:00 IST
  • அகமதாபாத்தில் நடைபெற்ற 'சஹகர் சம்வாத்' நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார்.
  • அதில் பல நன்மைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 'சஹகர் சம்வாத்' நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ஓய்வுக்குப் பிறகு, வேதங்கள் மற்றும் உபநிடதங்களைப் படிப்பதற்கும், இயற்கை விவசாயம் செய்வதற்கும் தனது நேரத்தை ஒதுக்க விரும்புவதாகக் கூறினார்.

இயற்கை விவசாயம் என்பது அறிவியல் சார்ந்த நுட்பம் என்றும், அதில் பல நன்மைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் கோதுமை பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இயற்கை விவசாயத்தால், உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும், மருந்துகளைச் சார்ந்திருப்பது குறையும். இயற்கை விவசாயமும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது என்றும், தனது விவசாய நிலத்தில் பயிரை 1.5 மடங்கு அதிகரித்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News