இந்தியர்கள் தாய்லாந்து செல்ல வேண்டாம்: தூதரகம் எச்சரிக்கை
- கம்போடியா-தாய்லாந்து இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
- எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை இரு நாடுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.
புதுடெல்லி:
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இரு நாடுகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். எனவே எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை இரு நாடுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அதில், தாய்லாந்து-கம்போடியா மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே தாய்லாந்தின் சுரின், சிசாகெட் உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.