இந்தியா

(கோப்பு படம்)

வைகை அணை விவகாரம்- கேரள மனுதாரர் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Published On 2022-12-13 20:02 GMT   |   Update On 2022-12-13 20:02 GMT
  • முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த உத்தரவிட கோரிக்கை.
  • ஜனவரி மாதத்தில் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பரிசீலிக்கப்படும்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அஜய் ஜோஸ் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டவும், வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மேலும் தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு, தமிழக மற்றும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியிருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேத்யுஸ் நெடும்பாறா முறையிட்டார்.

இதை நிராகரித்த தலைமை நீதிபதி, இந்த வாரம் புதிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். உங்களது மனுவை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. 

Tags:    

Similar News