மாப்பிள்ளைக்கு அவ்ளோ வெறி.. திருமண ஊர்வலத்தில் பண மாலையை பறித்த நபரை சேஸ் செய்து பிடித்த வீடியோ
- குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது
- வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.
பைக்கில் மற்றொரு வாகனத்தை சேஸ் செய்து அதில் தாவி ஏறுவது எல்லாம் ஆக்ஷன் சினிமாவில் கிளீசேவாக இடம்பெறும் காட்சிதான்.
ஆனால் இதுவே நிஜத்தில் உத்தர பிரதேச சாலையில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர சாலையில், குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக குட்டி யானையை [மினி டிரக்கை] ஓட்டி வந்தவர் ஊர்வலம் அருகே சென்றபோது குதிரையில் அமர்ந்திருந்த மணமகனின் கழுத்தில் இருந்த பண மாலையை கிழித்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் உடனே குதிரையில் இருந்து இறங்கி வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பைக்கில் இருந்து குட்டி யானை மீது குதித்து பக்கவாட்டு கதவு வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து அதை நிறுத்தச் செய்துள்ளார்.
பின்னர் பண மாலையை பறித்த அந்த டிரைவரை கீழ் இறங்கிச் செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்குள் மாப்பிள்ளையின் நண்பர்களும் அங்கு வந்து சேரவே டிரைவருக்கு கடுமையான கவனிப்பு கிடைத்துள்ளது.
நான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று அந்த ஓட்டுநர் மாப்பிள்ளையிடம் கெஞ்சுகிறார். இந்த ஆக்ஷன் சேசிங் காட்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப் பதவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.