இந்தியா

தாய் - தந்தையை சுத்தியலால் அடித்தே கொன்ற கொடூர மகன்..

Published On 2025-07-17 00:33 IST   |   Update On 2025-07-17 00:33:00 IST
  • நீண்ட காலமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து வசித்து வந்தார்.
  • இரவு முழுவதும் அவர்களின் உடல்களின் அருகே ஹிமான்ஷு ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்தார்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தோனாபால் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹிமான்ஷு (55).

மதுவுக்கு அடிமையான இவர், சண்டை காரணமாக நீண்ட காலமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து வசித்து வந்தார்.

இதற்கிடையில், ஹிமான்ஷு செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். தனது வயதான பெற்றோர்களான ஹதிபந்து சாஹு (81) மற்றும் சாந்தி சாஹு (72) ஆகியோருடன் சண்டையிட்டார்.

கோபத்தில், கற்களை உடைக்கும் பெரிய சுத்தியலால் அவர்களை அடித்தார். இதன் விளைவாக, பெற்றோர் துடிதுடித்து இறந்தனர். இரவு முழுவதும் அவர்களின் உடல்களின் அருகே ஹிமான்ஷு ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்தார்.

இன்று (புதன்கிழமை) காலை, அக்கபக்கத்தினர் ஹிமான்ஷு பெற்றோரின் உடல் அருகே அமர்ந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹிமான்ஷுவை கைது செய்தனர். பெற்றோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. 

Tags:    

Similar News