இந்தியா

அந்த நாள் வரும்.. பல வருடங்களாக முதல்வராக முயல்கிறேன் - ஆதங்கத்தை கொட்டிய அஜித் பவார்

Published On 2025-05-03 15:43 IST   |   Update On 2025-05-03 15:43:00 IST
  • நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
  • இந்த விழாவின் போது, ​​பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மும்பையின் வோர்லியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மகாராஷ்டிர மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு மே 4 வரை தொடரும். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இந்த நிகழ்வில் இன்று அஜித் பவாரிடம் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், வரும் காலங்களில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஒரு பெண் வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அஜித் பவார், "நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதற்கு, தற்செயலாக ஏதாவது நடக்க வேண்டும்.

இப்போது பாருங்கள், நானும் பல வருடங்களாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் விஷயங்கள் ஒருபோதும் பலனளிப்பதில்லை. அந்த நாள் எப்போதாவது வரும்" என்று பெருமூச்செறிந்தார்.

2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத கட்சியை உடைத்த அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனார்.

ஆனால் முதல்வர் ஆக முடியாத ஆதங்கத்தை அவர் பல மேடைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News