இந்தியா

லஞ்சம் வாங்கி ரூ.150 கோடி சொத்து சேர்த்த மின்வாரிய அதிகாரி கைது

Published On 2025-09-17 14:04 IST   |   Update On 2025-09-17 14:04:00 IST
  • லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
  • புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மாதப்பூர், காணாமேட்டில் உள்ள மேக்னஸ் லேக் வியூ குடியிருப்பை சேர்ந்தவர் அம்பேத்கர்.

இவர் மின்சார வாரியத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதப்படுத்தி வந்தார்.

இதனால் மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்கு கோடிக்கணக்காண ரூபாயை லஞ்சமாக கொடுத்து மின் இணைப்பு பெற்றனர்.

அம்பேத்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

சங்கரெட்டி மாவட்டம் பிரங்குடா மல்லிகாராஜன நகரில் உள்ள அம்பேத்கரின் பினாமி சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அம்பேத்கரின் வங்கி கணக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.150 கோடி என தெரியவந்துள்ளது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அம்பேத்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News