இந்தியா

பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சந்திப்பு

Published On 2023-12-26 12:40 GMT   |   Update On 2023-12-26 12:40 GMT
  • தெலுங்கானாவில் காங்கிரஸ் 65 இடங்களில் வெற்றி பெற்றது.
  • அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், துணை முதல் மந்திரியாக விக்ரமர்க மல்லு பதவியேற்றார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது துணை முதல் மந்திரியும் உடனிருந்தார்.

5 மாநில தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மாநிலங்களின் முதல் மந்திரிகள் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடியைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News