பிக்சட் டெபாசிட்டுக்கு கூட வரி.. என்ன சார் நியாயம்.. பேங்க் மேனேஜரை போட்டு பொளந்த கஸ்டமர் - வீடியோ
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்த்ராபூரில் உள்ள வங்கி கிளையில் நடந்துள்ளது
- பெண்ணை மிரட்டி அவரின் போனை பிடுங்கி கீழே வீசும் வீடியோவும் வெளியாகி உள்ளது
குஜராத்தில் வங்கி மேனேஜருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த சண்டையின் வீடியோ இணையத்தில் தீயாக வருகிறது. பிக்சட் டெபாசிட் சேமிப்புக்கு அதிக வரிப் பிடித்தம் செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்மன் ராவல் என்ற வாடிக்கையாளர் வங்கி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் சண்டையாக மாறியாக நிலையில் வங்கி மேனேஜரை ஜெயம் ராவல் சரமாரியாக தாக்கியுள்ளார். ஜெய்மன் ராவல் உடன் வந்திருத்த அவரது தாய் அவரை தடுக்க முயற்சித்தபோதும் கோபத்தின் உச்சியில் இருந்த ஜெய்மன் ராவல் தாக்குதலை தொடர்ந்துள்ளார்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்த்ராபூரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் வஸ்த்ராபூர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பீகார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதான பகுதியில் உள்ள கனரா வங்கிக் கிளையிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பரவிய வீடியோவில், நபர் ஒருவர் வங்கியில் வேலை செய்யும் பெண்ணை மிரட்டி அவரின் போனை பிடுங்கி கீழே வீசுவதும், CIBIL ஸ்கோர் தொடர்பாக வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுப்பதும் பதிவாகி உள்ளது.