இந்தியா

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி: 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கிய IRCTC

Published On 2025-06-04 14:08 IST   |   Update On 2025-06-04 14:08:00 IST
  • தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.
  • தட்கல் டிக்கெட்டு சாதாரணமாக கிடைப்பது இல்லை.

நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.

பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தக்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.

பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைப்பது இல்லை. எல்லா வகுப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை.

இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC முடக்கியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News