இந்தியா

நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தரராஜன்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

Published On 2023-02-06 05:02 IST   |   Update On 2023-02-06 05:02:00 IST
  • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்தார்.
  • தொலைநோக்கு பார்வையுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதுடெல்லி:

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

அப்போது, தொலைநோக்கு பார்வையுடன் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வருங்கால முன்னேற்ற திட்டங்கள் குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News