இந்தியா

இளம்பெண் சிவலிங்கேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை படத்தில் காணலாம்.

கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் 2 குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்று இளம்பெண் தற்கொலை

Published On 2023-02-07 09:43 IST   |   Update On 2023-02-07 09:43:00 IST
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
  • மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை, பெடசெருவு பகுதியை சேர்ந்தவர் இந்திர சேனா. இவருக்கும் ரொம்பி சர்லா, நல்கர்ல பாடு பகுதியை சேர்ந்த சிவலிங்கேஸ்வரி (வயது 27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தம்பதிக்கு சரண் சாய் (8), ஜிதின் (4) என 2 மகன்கள் இருந்தனர். இந்திர சேனா குண்டூரில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இந்திர சேனா திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் இந்திர சேனா அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்காததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது இந்திர சேனா, சிவலிங்கேஸ்வரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி நேற்று காலை கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் சிவலிங்கேஸ்வரியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News