இந்தியா

விஜயவாடா-சென்னைக்கு வரும் 24-ந்தேதி முதல் புதிய வந்தே பாரத் ரெயில்

Published On 2023-09-21 09:29 IST   |   Update On 2023-09-21 09:29:00 IST
  • விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • வந்தே பாரத் ரெயில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடா-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

இதன் தொடக்கவிழா விஜயவாடாவில் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

24-ந் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கன்பரன்சிங் மூலம் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வந்தே பாரத் ரெயில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மீண்டும் விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை-விஜயவாடா இடையே குறைந்த நேரத்தில் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கவர்னர் அப்துல் நாசிர் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள்வதால் விஜயவாடாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News