இந்தியா

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கிய பொதுமக்கள்

Published On 2023-07-19 09:30 IST   |   Update On 2023-07-19 11:34:00 IST
  • தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க வரிசையில் நிற்கும்படி வியாபாரி கேட்டுக் கொண்டார்.
  • உழவர் சந்தை பகுதியில் தக்காளி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில் தக்காளிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று விவசாயி ஒருவர் தக்காளி விற்பனைக்கு கொண்டு வந்தார்.

அவர் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.50 என கூவி கூவி விற்பனை செய்தார். இதனை கேட்டதும் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க வரிசையில் நிற்கும்படி வியாபாரி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் வரிசையை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.

2 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தக்காளி வாங்கிச் சென்றனர். அதிகளவு பொதுமக்கள் வந்ததால் ஒருவருக்கு 3 கிலோ தக்காளி மட்டுமே விவசாயி வழங்கினார்.

உழவர் சந்தை பகுதியில் தக்காளி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News