இந்தியா

சித்தூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை- 3 மணி நேரத்தில் 3 டன் தக்காளி விற்று தீர்ந்தது

Published On 2023-07-16 09:29 IST   |   Update On 2023-07-16 09:29:00 IST
  • சித்தூர் உழவர் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை வெளி சந்தையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • நீண்ட வரிசையில் நின்று சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை தக்காளியை வாங்கி சென்றனர்.

சித்தூர்:

தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு மானிய விலையில் உழவர் சந்தைகளில் 1 கிலோ தக்காளியை ரூ.50-க்கு பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

ஆந்திர விவசாயிகளிடம் இருந்து. தக்காளிகளை கொள்முதல் செய்து வெளிமாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

இதுவரை 100 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்தூர் உழவர் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை வெளி சந்தையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சித்தூரில் உள்ள உழவர் சந்தைகளில் மானிய விலையில் நேற்று ஒருவருக்கு 1 கிலோ தக்காளி விற்பனை செய்வதால் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

இதனால் நீண்ட வரிசையில் நின்று சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை தக்காளியை வாங்கி சென்றனர்.

நேற்று 3 மணி நேரத்தில் 3 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News