தெலுங்கானா மாநில தேர்தல் பிரசாரத்தில் மூதாட்டியை தூக்கி நடனமாடிய அமைச்சர்
- மல்லா ரெட்டி மூதாட்டியிடம் வெற்றிச் சின்னமான இரட்டை விரலை காண்பிக்கும்படி மூதாட்டியிடம் கூறினார்.
- பெண்கள் கைகளை தட்டியபடி ஆரவாரம் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானாவில் அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி மேட்சல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
60 வயதான மல்லா ரெட்டி தனது தொகுதி மக்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது நடனம் ஆடுவது பொது மக்களிடம் இயல்பாக பழகுவது உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் மீது அந்த தொகுதி மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மல்லா ரெட்டி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஏராளமான மூதாட்டிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். தனது அருகில் இருந்த மூதாட்டியை பார்த்த மல்லா ரெட்டி தனது மடியில் அமருமாறு கூறினார்.
மூதாட்டி வெட்கப்பட்டு அவரது மடியில் உட்கார மறுத்தார். இதையடுத்து மல்லா ரெட்டி மூதாட்டியை தூக்கி கொண்டு நடனம் ஆடினார்.
அப்போது மல்லா ரெட்டி மூதாட்டியிடம் வெற்றிச் சின்னமான இரட்டை விரலை காண்பிக்கும்படி மூதாட்டியிடம் கூறினார்.
அருகில் இருந்த பெண்கள் கைகளை தட்டியபடி ஆரவாரம் செய்தனர். அமைச்சர் மூதாட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த தேர்தலின் போது ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் சலூன் கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு கட்டிங், சேவிங் செய்தார்.
மேலும் திறந்தவெளியில் குழந்தை ஒன்று மலம் கழித்துக் கொண்டு இருந்தது. இதனை கண்ட வேட்பாளர் ஓடிப்போய் சென்று குழந்தையின் தாயிடம் தண்ணீர் வாங்கி குழந்தைக்கு கால் கழுவி விட்டு ஓட்டு கேட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை யாராலும் மறக்க முடியாது.