இந்தியா

புட்போர்டு அடிக்காம உள்ளே போங்க... எச்சரிக்கும் நாய்

Published On 2023-12-31 12:57 IST   |   Update On 2023-12-31 12:57:00 IST
  • தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் நாய் ஒன்று செய்யும் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • வீடியோ 1 லட்சத்து 53 ஆயிரம் பார்வைகளையும், 2300 லைக்குகளையும் பெற்றுள்ளது.

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் நாய் ஒன்று செய்யும் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனந்த் ரூபனகுடி என்பவர் எக்ஸ் தள பக்கத்தில் ஃபுட் போர்டு பயணத்திற்கு எதிரான இயக்கத்தில் வழங்கப்படும் சிறந்த உதவி என்ற தலைப்பிட்டு பகிர்ந்துள்ள வீடியோவில், ஓடும் ரெயிலின் ஒவ்வொரு பெட்டிகளின் வாசற்படியில் உட்கார்ந்து செல்பவர்களை நாய் கவ்வுகிறது. அப்போது வாசற்படியில் உட்கார்ந்து வருபவர்கள் கால்களை தூக்கிவிடுகிறார்கள்.


இந்த வீடியோ 1 லட்சத்து 53 ஆயிரம் பார்வைகளையும், 2300 லைக்குகளையும் பெற்றுள்ளது.

Tags:    

Similar News