இந்தியா

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது- ராகுல் காந்தி

Published On 2022-07-01 07:46 GMT   |   Update On 2022-07-01 10:26 GMT
  • பணக்காரர்கள் வரிவிலக்குகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மூலம் கோடிக்கணக்கில் விழுங்குகின்றனர்.
  • ஏழை குழந்தைகள் அங்கன்வாடிகளில் சத்தான உணவு பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

அதானி குழுமம் அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசியில் உள்ள 6.38 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை எந்த வரியும் இல்லாமல் வாங்கும் அதே வேளையில், மில்லியன் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பெற ஆதார் அடையாள அட்டைகள் தேவைப்படுகிறது என்று ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

"இங்கு இரண்டு இந்தியா உள்ளது. பணக்காரர்கள் வரிவிலக்குகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மூலம் கோடிக்கணக்கில் விழுங்குகின்றனர். ஏழை குழந்தைகள் அங்கன்வாடிகளில் சத்தான உணவு பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

பாஜக அரசு நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News