இந்தியா

வறுமையால் ரூ.7000-க்கு பெண் சிசுவை விற்ற பெற்றோர்

Published On 2022-07-03 06:11 GMT   |   Update On 2022-07-03 06:11 GMT
  • போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் வறுமையின் காரணமாக பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.7000-க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக, தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர், சுரேஷ் தாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தை இல்லாத தம்பதிக்கு பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை ரூ.7000-க்கு விற்றதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் குழந்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர், போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், " நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் குழந்தையை விற்கவில்லை " என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News