இந்தியா

உனாவில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Published On 2022-10-12 12:12 IST   |   Update On 2022-10-12 12:12:00 IST
  • ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.
  • குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஹிமாச்சல பிரதேசத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்குள்ள உனா மாவட்டத்தில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காந்தி நகரில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News