இந்தியா

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

Update: 2023-03-25 09:06 GMT
  • டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
  • மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடியபடி பிரதமர் மோடி பயணம் செய்தார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார்.

அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிறகு பெங்களூரு வந்த பிரதமர் மோடி கே.ஆர்.புரம்-ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.


அதைத்தொடர்ந்து டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.

மேலும் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடியபடி பிரதமர் மோடி பயணம் செய்தார்.

Tags:    

Similar News