இந்தியா

காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி- ப.சிதம்பரம்

Published On 2024-03-29 08:19 GMT   |   Update On 2024-03-29 09:45 GMT
  • அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை.
  • 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?

புதுடெல்லி:

2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி நடப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?. 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் முடக்க சதி நடக்கிறது என கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News