இந்தியா

திருமண வரவேற்பில் அலைபாயுதே பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய மணமக்கள்

Published On 2023-09-06 12:18 IST   |   Update On 2023-09-06 12:18:00 IST
  • சமீபகாலமாக கலை நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுடன் மணமக்களும் சேர்ந்து நடனமாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
  • வீடியோவில் மணமக்கள் தங்களது அற்புதமான நடன அசைவுகள் மூலம் பார்வையாளர்களின் கரவொலிகளை பெற்றநிலையில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

திருமண விழாக்களில் மணமக்களையும், விருந்தினர்களையும் மகிழ்விப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமீபகாலமாக கலை நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுடன் மணமக்களும் சேர்ந்து நடனமாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் மணமக்கள் 'அலைபாயுதே' படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிக்கு அசத்தலாக நடனமாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

அந்த வீடியோவில் மணமக்கள் தங்களது அற்புதமான நடன அசைவுகள் மூலம் பார்வையாளர்களின் கரவொலிகளை பெற்றநிலையில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News