இந்தியா
ரூ.7.7 லட்சம் கொடுத்து கார் நம்பர் பிளேட் வாங்கிய தொழிலதிபர்
- காருக்கு பேன்சியாக நம்பர் வாங்க ஆசைப்பட்ட ராஜ், 7777 என்ற எண்ணை தேர்வு செய்துள்ளார்.
- பேன்சி நம்பர் பொருத்திய காருடன் ராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜ். இவர் ஆசை ஆசையாக பி.எம்.டபிள்யூ. தயாரிப்பான ஐ.7 மாடல் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
இந்தியாவில் இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ.2 கோடி என கூறப்படும் நிலையில், அந்த காருக்கு பேன்சியாக நம்பர் வாங்க ஆசைப்பட்ட அவர், 7777 என்ற எண்ணை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த எண்ணை பெறுவதற்கு கடும் போட்டி நிலவியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற ராஜ் கே.எல்.07 டி.சி.7777 என்ற பேன்சி நம்பர் பிளேட்டை வாங்குவதற்காக அவர் ரூ.7.7 லட்சம் செலவழித்துள்ளார். பேன்சி நம்பர் பொருத்திய காருடன் ராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.