இந்தியா

காஷ்மீரில் உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

Published On 2022-07-13 11:37 IST   |   Update On 2022-07-13 11:37:00 IST
  • ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது.
  • போலீசார் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது.

இதை குறி வைத்து நேற்று இரவு 7.15 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அங்கு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தாக் அகமது குண்டு பாய்ந்து பலியானார்.

பயங்கரவாதிகள் சுட்டதில் பயாஸ் அகமது, அபுபக்கர் ஆகிய இரண்டு போலீசாரும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News