இந்தியா

திட்டமிட்டபடி தங்களது பணியை செய்வதே பிரதமரின் தாயாருக்கு செலுத்தும் மரியாதை- மோடியின் குடும்பத்தினர் வேண்டுகோள்

Published On 2022-12-30 04:38 GMT   |   Update On 2022-12-30 06:57 GMT
  • பிரதமரின் தாயாரின் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
  • தங்களது பணியை திட்டமிட்டபடி செய்வதே பிரதமரின் தாயாருக்கு செலுத்தும் மரியாதையாகும்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

தொடர்ந்து, இறுதி சடங்கிற்காக மறைந்த ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரதமர் மோடி இறுதி சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தனது தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். இதன்மூம் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரவர் தாங்கள் திட்டமிட்டபடி தங்களது பணியை செய்யுங்கள் என்று பிரதமர் மோடியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், தங்களது பணியை திட்டமிட்டபடி செய்வதே பிரதமரின் தாயாருக்கு செலுத்தும் மரியாதையாகும் என்றும், மறைந்த ஆன்மாவை மனதில் நிறுத்துவதே போதுமானது. கடினமான காலங்களில் அனைவரின் பிார்த்தனைகள், இரங்கலுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் தாயாரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்பட நாடு முழுவதிலும் இருந்து தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News