இந்தியா
அவல் தொழிற்சாலையில் தீ விபத்து- 3 பெண்கள் பலி
- தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் பணிபுரியும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்தியப் பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள அவல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
உஜ்ஜயினியில் உள்ள நாக்ஜிரி தொழிற்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் பணிபுரியும்போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவர்கள் துர்கா (45), ஜோதி பாய் (25) மற்றும் சம்மா பாலிவால் (45) என அடையாளம் காணப்பட்டனர். ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று அவர் கூறினார்.