இந்தியா

வேறு ஒருவருக்கு விற்ற பிறகு அதிக பால் கொடுத்ததால் பசுவின் மடியை அறுத்த விவசாயி

Published On 2024-01-26 05:47 GMT   |   Update On 2024-01-26 05:47 GMT
  • நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீ கந்தபுரம். அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி பைரப்பா பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு சரியாக பால் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே தன்னுடைய பசுவை அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கு பைரப்பா விற்று விட்டார். பசுவை வாங்கிய விவசாயி அதை சரியாக பராமரித்து வளர்த்து வந்தார்.

நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது. இந்த விஷயம் பைரப்பாவிற்கு தெரியவந்து ஆவேசமடைந்துள்ளார்.

தன்னிடம் இருக்கும் போது குறைந்த அளவே பால் கொடுத்த அந்த பசு மாடு, விற்பனை செய்த பின்அதிக பால் கொடுத்து தன்னை வஞ்சித்து விட்டதாக மனதிற்குள்ளாகவே குமுறினார்.

விவசாயியின் தோட்டத்தில் இருந்த மாட்டை பார்த்த அவர் ஆத்திரம் தலைக்கேறி அதன் மடியை கத்தியால் அறுத்தார். பசு அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அதற்குள்ளாக பைரப்பா தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News