இந்தியா
கோப்புப்படம்
பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
- பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
- மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மோடி இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும். எனவே பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மோடி இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இக்கூட்டத்தில், மத்தியில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.