இந்தியா

ஸ்டேட் வங்கிக்குள் நுழைந்த காளை மாடு- வைரலான வீடியோ

Published On 2024-01-11 15:46 IST   |   Update On 2024-01-11 15:46:00 IST
  • வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது.
  • வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் காளை மாடு ஒன்று புகுந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள ஷாகஞ்ச் பகுதியில் உள்ள வங்கி கிளைக்குள் காளை ஒன்று வழி தவறி சென்றுள்ளது. இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது. இதைப்பார்த்த சில வாடிக்கையாளர்கள் பீதி அடைந்து சத்தம் போடுகின்றனர்.

உடனே வங்கி காவலாளி கையில் கம்புடன் வந்து காளையை வங்கியில் இருந்து வெளியே விரட்டும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News