இந்தியா

மகளின் ஆபாச வீடியோ வெளியானதை தட்டி கேட்ட ராணுவ வீரர் அடித்துக்கொலை- 7 பேர் கைது

Published On 2022-12-27 11:46 IST   |   Update On 2022-12-27 11:46:00 IST
  • மாணவனின் உறவினர்கள் வகேலாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
  • உறவினர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் இறந்து போனார்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் நாடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தை சேர்ந்தவர் மெல்ஜிபாய் வகேலா. இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.

குடும்பத்தை பார்ப்பதற்காக அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது மகளின் ஆபாச வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானதை கண்டு மெல்ஜிபாய் வகேலா அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அவர் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது சக மாணவன் இதை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவனின் வீட்டுக்கு நியாயம் கேட்க மெல்ஜிபாய் வகேலா சென்றார்.

அங்கு தகராறு ஏற்பட்டது. மாணவனின் உறவினர்கள் வகேலாவை கடுமையாக தாக்கியுள்ளார். அவர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் இறந்து போனார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக தட்டி கேட்க சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரரையும், அவரது குடும்பத்தையும் பள்ளியில் படிக்கும் சக மாணவனின் உறவினர்கள் அவதூறாக பேசியுள்ளனர்.

இதை எதிர்த்த எல்லை பாதுகாப்பு படை வீரரை அவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News