இந்தியா
துணைவேந்தர்கள் தேர்வு-ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்
- கேரள பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்தார்.
- ஆளுநரின் முடிவுக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
புதுடெல்லி:
கேரள பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவை அமைக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. ஆனால் ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், துணை வேந்தர்கள் தேர்வுக்கான தேர்வுக் குழுவை அமைக்கும் அதிகாரம் யுஜிசி விதிமுறைகள் படி ஆளுநருக்கு இல்லை. கேரளாவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமன தேர்வுக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.