இந்தியா

சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் போட்டோ, ரீல்ஸ் எடுக்க தடை

Published On 2025-09-13 04:52 IST   |   Update On 2025-09-13 04:52:00 IST
  • சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கேமரா செல்பி ஸ்டிக் போன்ற உபகரணங்களை எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது, நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் 'கேமரா செல்பி ஸ்டிக்' போன்ற உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், சுப்ரீம் கோர்ட்டின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் ஊடகத்தினர் நுழைய ஒரு மாதம் தடை விதிக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News