இந்தியா

குடும்ப தகராறில் ஆவேசம்- கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய பெண்

Published On 2025-07-24 16:10 IST   |   Update On 2025-07-24 16:21:00 IST
  • வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார்.
  • வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பீகார் மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த அவரது மனைவி, திடீரென ஆவேசமடைந்தார். கணவனை அடித்து கீழே தள்ளினார். பின்னர் கணவனின் உடல் மீது உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கினார்.

நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.

இருவரையும் சமாதானம் செய்தனர். வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News