இந்தியா

டெல்லி கார் வெடிப்புக்கு 3 மணி நேரம் முன்பே சமூக வலைதளத்தில் எச்சரித்த மாணவன் - பதிவு வைரல்

Published On 2025-11-12 03:45 IST   |   Update On 2025-11-12 03:45:00 IST
  • 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?
  • இங்கே என்ன நடக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான 'ரெடிட்' இல் ஒரு மாணவரின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.

மாலை 4 மணியளவில் அவரது பதிவில், 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?. நான் இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்தேன். செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் முன்பை விட அதிகமான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளனர். மெட்ரோவில் பயணிக்கும்போது கூட இவ்வளவு வீரர்களை நான் பார்த்ததில்லை. இங்கே என்ன நடக்கிறது?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு இடைப்பட்டு சரியாக 3 மணி நேரம் கழித்து 7 மணியளவில் அதே பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.  இதைதொடர்ந்து அந்த பதிவு தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News