இந்தியா

குழந்தைகளை வெறிகொண்டு துரத்திய தெரு நாய்கள் - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

Published On 2025-08-23 15:11 IST   |   Update On 2025-08-23 15:11:00 IST
  • கேரளாவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை கூட்டமாக தெருநாய்கள் தாக்க வந்தது.
  • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளன.

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடு முழுவதும் பேசுபொருளாகியது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து தெருநாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது. மேலும் ஆக்ரோஷமான, ரேபிஸ் பாதிப்பு கொண்ட நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் உந்த உத்தரவுக்கு இடைய நாடு முழுவதும் பல நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக கேரளாவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை கூட்டமாக தெருநாய்கள் தாக்க வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சமயத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட குழந்தைகள் கேட்டை மூடியதால் நூல் இழையில் நாய்களிடம் இருந்து தப்பித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளன. 

Tags:    

Similar News