இந்தியா

தெருநாய் வழக்கு: தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2025-10-27 12:37 IST   |   Update On 2025-10-27 12:37:00 IST
  • தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம்
  • உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தெருநாய் விவகாரம் குறித்து 2 மாதத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இதனையடுத்து 2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் 3 ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

Tags:    

Similar News