இந்தியா
பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்- அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்
- போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என தகவல் வெளியானது.
- இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டர்களில், பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க, பெண்கள் 'நள்ளிரவு விருந்துகளில் பங்கேற்கக்கூடாது, இருள் சூழ்ந்த மற்றும் தனியான இடங்களுக்கு நண்பருடன் செல்லக்கூடாது, வீட்டிலேயே இருக்கவும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என தகவல் வெளியானது.
ஆனால், தங்கள் அனுமதியின்றி சுவரொட்டிகளை தன்னார்வ அமைப்பினர் ஒட்டியுள்ளதாக காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளது.
அகமதாபாத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.