நாளை முதல் கட்ட தேர்தல்.: பா.ஜ.க.வில் இருந்து விலகி ஆர்.ஜே.டி.யில் இன்று இணைந்த எம்.எல்.ஏ.
- நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிர்பெயின்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான லலன் குமார் இன்று அக்கட்சியில் இருந்து திடீரென விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
அவர் கட்சியில் இருந்து விலகியது பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த அவர், ஆர்.ஜே.டி.யில் இணைந்துள்ளார். அவர் பீகார் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.